புரோ கபடி லீக் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற 45ஆவது லீக் போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூரு புல்ஸ் அணியுடன் மோதியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே தமிழ் தலைவாஸ் அணி, ரைடிங், டிஃபெண்டிங்கில் புள்ளிகளை கோட்டைவிட்டது. இதனால், பெங்களூரு அணி முதலில் 10-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதையடுத்து, தமிழ் தலைவாஸ் அணி அடுத்தடுத்த நிமிடங்களில் புள்ளிகளை பெற்று ஆட்டத்தில் எழுச்சி கண்டது. இருப்பினும், தமிழ் தலைவாஸ் அணி 10-17 என்ற கணக்கில் முதல் பாதி முடிவில் பின்னடைவில் இருந்தது. இதைதத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது பாதி தொடக்கத்தில் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக செயல்பட்டதால், 17-19 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி ஆட்டத்தை தன் பக்கம் திரும்பியது.
-
Not the homecoming @tamilthalaivas wanted, but the one @BengaluruBulls had planned! 😏
— ProKabaddi (@ProKabaddi) August 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Can the 🏡 team script a comeback tomorrow?
Keep watching #VIVOProKabaddi, LIVE on Star Sports and Hotstar.#IsseToughKuchNahi #CHEvBLR pic.twitter.com/dfWvvGYHEE
">Not the homecoming @tamilthalaivas wanted, but the one @BengaluruBulls had planned! 😏
— ProKabaddi (@ProKabaddi) August 17, 2019
Can the 🏡 team script a comeback tomorrow?
Keep watching #VIVOProKabaddi, LIVE on Star Sports and Hotstar.#IsseToughKuchNahi #CHEvBLR pic.twitter.com/dfWvvGYHEENot the homecoming @tamilthalaivas wanted, but the one @BengaluruBulls had planned! 😏
— ProKabaddi (@ProKabaddi) August 17, 2019
Can the 🏡 team script a comeback tomorrow?
Keep watching #VIVOProKabaddi, LIVE on Star Sports and Hotstar.#IsseToughKuchNahi #CHEvBLR pic.twitter.com/dfWvvGYHEE
ஆனால், இறுதியில் தமிழ் தலைவாஸ் மீண்டும் சொதப்பியதால் இப்போட்டியில் 21-32 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. சொந்த மண்ணில் வெற்றிபெறும் என நம்பியிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு புல்ஸ் அணி எட்டு போட்டிகளில் ஐந்து வெற்றி, மூன்று தோல்வி என 27 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. மறுமுனையில், தமிழ் தலைவாஸ் அணி ஏழு போட்டிகளில் மூன்று வெற்றி, மூன்று தோல்வி, ஒரு டிரா என 20 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் இருக்கிறது.