ETV Bharat / sports

#FIVBWorldcup: "நாங்களும் கெத்து தான்..." - தென்கொரியாவை பந்தாடியது அமெரிக்கா! - FIVB Volleyball Women's World Cup

மகளிர் உலகக்கோப்பை கைப்பந்து தொடரின் கடைசி லீக் போட்டியிலும் அமெரிக்க அணி 3-1 என்ற செட் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி வெற்றிபெற்றது.

USA beat South Korea
author img

By

Published : Sep 30, 2019, 7:54 PM IST

மகளிர் உலகக்கோப்பை கைப்பந்து தொடரின் பதினோறாவது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் நிலைவகிக்கும் அமெரிக்கா அணி தென் கொரிய அணியை எதிர்கொண்டது.

ஏற்கனவே இத்தொடரில் சீனாவைத் தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் எதிரான போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் நிலையில் உள்ள அமெரிக்க அணி, தென் கொரிய அணியை வெளுத்து வாங்கியது.

இப்போட்டியின் முதல் இரண்டு செட்களையும் அமெரிக்க அணி 25-21, 25-16 என்ற புள்ளிகள் அடிப்படையில் தென் கொரியாவிடமிருந்து கைப்பற்றியது.

அதன் பின் மூன்றாவது செட் கணக்கை 25-16 என்ற கணக்கில் தென் கொரிய அணி,மூன்றாவது செட்டைக் கைப்பற்றி அமெரிக்காவிற்கு ஷாக் கொடுத்தது. இருப்பினும் நான்காவது செட் கணக்கை அமெரிக்கா 25-22 எனக் கைப்பற்றி தென் கொரிய அணியை வீழ்த்தியது.

இதன் மூலம் இத்தொடரின் கடைசி லீக் போட்டியிலும் அமெரிக்கா அணி 3-1 என்ற செட் கணக்கில் தென் கொரிய அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியளில் 28 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை தக்க வைத்துக்கொண்டது.

இதையும் படிங்க:#IAAFDoha2019: தாய்மைக்குப்பின் தங்கம் வென்ற ஜமைக்கா மங்கை!

Intro:Body:

FIVB Volleyball Women's World Cup match 2

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.