ஃபார்முலா ஒன் கார் பந்தைய விளையாட்டின் நட்சத்திர வீரர் கிமி ரெய்கோனென். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு உலகச்சாம்பியன் பட்டம் வென்றவர். இந்நிலையில், இவர் தற்போது அபுதாபி கிராண்ட்பிரிக்ஸ் கார் பந்தையத்தில் கலந்துகொண்டுள்ளார்.
இதில் இன்று (டிசம்பர் 12) நடைபெற்ற இரண்டாவது பயிற்சி போட்டியில் கிமி ரெய்கோனெனும் பங்கேற்றார். இதில் சிறப்பாக காரை இயக்கி வந்த ரெய்கோனென், மின்னல் வேகத்தில் சீறிபாய்ந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ரெய்கோனென் இயக்கிய காரின் பின் பகுதியில் தீ பற்றத் தொடங்கியது. அவர் காரை வேகமாக இயக்கியதால், தீ காரின் முன்பக்கம் வரை பரவத் தொடங்கியது. இதனை சூதாரித்த ரெய்கோனென், காரை நிறுத்தி வெளியேறினார்.
பின்னர், டிராக்கில் இருந்த பாதுகாப்பு ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு, காரில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்திலிருந்து கிமி ரெய்கோனென் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து பேசிய ரெய்கோனென், “காரில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அச்சம் இல்லை. ஏனெனில் பந்தையத்தின் போது இதுபோன்ற விபத்துகள் நிகழ்வது இயல்பான ஒன்றுதான். மேலும் இந்த காரில் நாங்கள் வழக்கத்திற்கு மாறான எஞ்ஜினை பயன்படுத்தி சோதித்தோம். அதனால் கூட இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம். இதனை நாங்கள் விரைவில் சரிசெய்துவிடுவோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:நியூசிலாந்து டி20 அணியிலிருந்து ராஸ் டெய்லர் அதிரடி நீக்கம்!