நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரில் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரி இயங்கிவருகிறது. பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் கபடி போட்டிகள் நேற்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கபடி போட்டியை சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி தேசியக்கொடியை ஏற்றி தொடங்கிவைத்தார்.
கல்லூரி ஆண்கள் பிரிவுக்கான இக்கபடி போட்டியில் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 26 கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடிவருகின்றன. இறுதிப் போட்டி இன்று மாலை நடைபெறுகிறது.
இதையும் படிங்க: அமித் பங்கலை கெளரவித்த மத்திய இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ!