கோவிட்-19 பெருந்தொற்றால் உலகம் முழுவதும் இதுரை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றிலிருந்து மக்களை காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் நட்சத்திர தடகள வீரரான மில்கா சிங் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் , மருத்துவராகப் பணியாற்றும் தனது மகள் மோனா மில்கா சிங்கை நினைத்து பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மில்கா சிங் கூறுகையில், ‘எனது மகள் மோனா மில்கா சிங், நியூ யார்க் நகரில் மருத்துவராக பணியாற்றி வருகிறார், மேலும் அவர் தற்போது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வருகிறார். அவரை நினைத்து நான் மிகவும் பெருமையடைகிறேன் என்றார். மேலும் அவர், "அவள் எங்களுடன் தினமும் பேசினாலும், அவளுடைய நலனைப் பற்றி நாங்கள் கவலையடைகிறோம். இருப்பினும் அவள் அவளது பணியைத் தான் மேற்கொண்டுவருகிறாள், அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. கிட்டத்திட்ட அந்நாட்டில் எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நான் விளையாடியதில் இவர்தான் சிறந்த கேப்டன்; ஆனால் அது தோனி கிடையாது: கம்பீர் ஓபன் டாக்!