ETV Bharat / sports

மீண்டும் களமிறங்கும் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன்!

author img

By

Published : Jul 24, 2020, 12:35 PM IST

டெல்லி: உலக அளவில் புகழ்பெற்ற ஜாம்பவான் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் தனது 54ஆவது வயதில் குத்துச்சண்டை போட்டியில் மீண்டும் பங்கேற்கவுள்ளார்.

Mike Tyson returns to boxing
குத்துசண்டை ஜாம்பவான் மைக் டைசன்

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "நான் மீண்டும் வருகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். அதில், ராய் ஜோன்ஸ் ஜூனியருடன் செப்டம்பர் 12ஆம் தேதி குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலுள்ள டிக்நிடி ஹெல்ட் ஸ்போர்ட்ஸ் பார்க்கில் இந்த குத்துச்சண்டை போட்டி செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. கண்காட்சி போட்டியான இதனை கலிஃபோர்னியா மாகாண தடகள கமிஷன் உறுதிபடுத்தியுள்ளது. அத்துடன் போட்டியில் பங்கேற்கும் இரு வீரர்களும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு தங்களது சான்றிதழை சமர்பித்த பிறகே போட்டியில் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் குத்துச்சண்டைக்கு மீண்டும் திரும்ப இருப்பதை சூசகமாகத் தெரிவித்திருந்தார் டைசன். இன்ஸ்டாகிராமில் குத்துச்சண்டை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டு, "நீங்கள் புத்திசாலியாக இருந்தால் எதுவும் சாத்தியமே. புத்திசாலித்தனமாக பயிற்சி மேற்கொண்டு மீண்டு வாருங்கள்" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதுவரை 58 குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றுள்ள டைசன், 50 போட்டிகளில் வென்றுள்ளார். கடைசியாக 2005இல் நடைபெற்ற கெவின் மெக்பிரைடுக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்ற பிறகு குத்துச்சண்டை போட்டிகளிலிருந்து விலகினார். இதைத்தொடர்ந்து தற்போது ராய் ஜோன்ஸ் ஜூனியருக்கு எதிராக மீண்டும் களமிறங்கவுள்ளார்.

மைக் டைசனுடன் இணைந்து குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க இருப்பது குறித்து ஜோன்ஸ் கூறியதாவது:

மீண்டும் குத்துச்சண்டை விளையாடுவதில் எனக்கு விருப்பம் இல்லையென்றாலும் மைக் டைசனுக்காக ஒப்புக்கொண்டேன். அவருடன் மோத இருப்பதை மறுப்பு சொல்ல முடியாத வாய்ப்பாக கருதுகிறேன். அவருடன் குத்துச்சண்டை செய்வதற்கு என்னை அவர் தேர்வு செய்துள்ளார், என்றார்.

இதையும் படிங்க: ஆர்சிபி பவுலிங் வலிமையாக இல்லை - ஆகாஷ் சோப்ரா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.