அமெரிக்கா, மலேசியா, இந்தியா என உலகின் பல்வேறு நகரங்களில் உள்ள ஆண்டென்னா, கட்டடம், பாலம் என அனைத்து இடங்களிலிருந்தும் பகல், இரவு நேரங்களில் பேஸ் ஜம்பிங் செய்து வியக்கவைத்தவர் மயாங்க் நாக்பால். இதற்காக இவரது பெயர் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.
இது குறித்து மயாங்க் பேசுகையில், ''லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் எனது பெயர் இடம்பெறவவிருப்பது பெருமையாக உள்ளது. சிறுவயதிலிருந்தே விளையாட்டின் மீதான காதல் அதிகம். அதிகமாக த்ரில் அனுபவம் பேஸ் ஜம்பிங்கில் கிடைப்பதால், அதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது.
2014ஆம் ஆண்டுக்குள் அனைத்து முக்கிய இடங்களிலிருந்தும் பேஸ் ஜம்பிங் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு எனது திறமைகளை வளர்த்துக்கொண்டேன். அது நிறைவேறியது மகிழ்ச்சியாக உள்ளது. என்னால் பல மனிதர்கள் பேஸ் ஜம்பிங்கில் ஆர்வமாகப் பங்கேற்றுள்ளனர்'' என்றார்.
2012ஆம் ஆண்டு பேஸ் ஜம்பிங் விளையாட்டைத் தொடங்கிய மயாங்க் நாக்பால், இதுவரை 800-க்கும் மேற்பட்ட ஸ்கை டைவிங்கும், 200-க்கும் மேல் பேஸ் ஜம்பிங்கும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கைப் பயணம்!