12-வது ஆசிய ஏர்கன் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் சீனதைபேயின் டாவோயுவான் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில், மகளிருக்கான தனிநபர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீராங்கனை 239 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்ததால், தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
அவரைத் தொடர்ந்து, ஹாங்காங்கின் ஷிங் ஹோ சிங் வெள்ளிப்பதக்கமும், ஐக்கிய அரபு அமீரகத்தின் வாபா அலாலி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
இதேபோல், ஆடவருக்கான தனிநபர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி 587 புள்ளிகளுடன் முதல் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.அதேபோன்று, மற்ற இந்திய வீரர்களான ரவிந்தர், அபிஷேக், ஆகியோரும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் 0.2 புள்ளிகள் வித்தாயசத்தில் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார். இதனால், அவருக்கு வெள்ளிப்பதக்கம் மட்டுமே கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, ஆடவர் அணிகளுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டஸில், சவுரப் சவுத்ரி, ரவிந்தர், அபிஷேக் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1742 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. இந்தப் போட்டியில் தென் கொரிய அணி 1730 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது.