2020ஆம் ஆண்டுக்கான ஹங்கேரியன் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடர் புடாபேஸ்ட் நகரில் நடைபெற்றுவருகிறது.
இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை மணிக்கா பத்ரா, தைவான் நாட்டைச் சேர்ந்த சென் ஸூ யூவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், மணிக்கா பத்ரா 9-11, 4-11, 7-11, 12-10, 11-9, 11-7, 14-12 என்ற செட் கணக்கில் த்ரில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி போட்டியில் சென்னையைச் சேர்ந்த இந்தியாவின் சரத் கமல் - சத்யன் ஞானசேகரன் இணை 11-8, 11-7, 11-8 என்ற நேர் செட் கணக்கில் ஹங்கேரி நாட்டின் அடெம் சூடி - நந்தோர் எசேக்கி (Adam Szudi - Nandor Ecseki) இணையை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.
இதையும் படிங்க: மகளிர் டி20 உலகக் கோப்பை: பூனம் புயலில் சிக்கி தோல்வியைத் தழுவிய ஆஸி.