பெய்ஜிங்: குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பெய்ஜிங்கில் பிப்ரவரி 4ஆம் தேதி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 109 வகையான விளையாட்டுகளில் 3,000 விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
அந்த வகையில், இந்தியா சார்பாக காஷ்மீரை சேர்ந்த பனிச்சறுக்கு வீரர் ஆரிப் கான் மட்டுமே குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்று, பெய்ஜிங் சென்றுள்ளார். இந்த நிலையில் பெய்ஜிங் விமான நிலையத்திற்கு வந்தடைந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் இந்தியா மேலாளரான முகமது அப்பாஸ் வாணிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முகமது அப்பாஸ் வாணி தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நான் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன். நலமாக உள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார். மேலும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் சென்றவர்கள், ஏற்பாட்டாளர்கள் என்று 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: U 19 World Cup: ஆப்கனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து