ETV Bharat / sports

நீச்சல் போட்டியில் நடிகர் மாதவன் மகன் புதிய சாதனை

ஒடிசாவில் நடைபெற்ற நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் நடிகர் மாதவன் மகன் 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைலை 16:01.73 கடந்து, ஐந்து வருட சாதனையை முறியடித்து புதிய தேசிய சாதனையை படைத்தார்.

நீச்சல் போட்டியில் நடிகர் மாதவன் மகன் புதிய சாதனை
நீச்சல் போட்டியில் நடிகர் மாதவன் மகன் புதிய சாதனை
author img

By

Published : Jul 18, 2022, 7:44 PM IST

புவனேஷ்வர்: தேசிய ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் நேற்று (ஜூலை 17) நடைபெற்றது. இதில், 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ஆடவர் குரூப்-ஏ பிரிவில், நடிகர் மாதவனின் மகன் வேதாந் மாதவன் பங்கேற்றார்.

இதில், சிறப்பாக விளையாடிய அவர் 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் புதிய தேசிய சாதனையை படைத்தார். நேற்றைய போட்டியில் அவர் 16:01.73 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய தேசிய சாதனையை படைத்தார். இதற்கு முன் அத்வைத் பேஜ் 2017ஆம் ஆண்டு 16:06.43 வினாடிகளில் இலக்கை கடந்ததுதான் தேசிய சாதனையாக இருந்தது.

நேற்றைய போட்டியில், மகாராஷ்டிரா சார்பில் பங்கேற்ற வேதாந் மாதவன் முதலிடம் பிடித்து தங்கம் வென்ற நிலையில், கர்நாடகாவின் அமோக் ஆனந்த் வெங்கடேஷ் (16:21.98) வெள்ளியையும், பெங்காலின் சூபோஜித் குப்தா (16:34.06) வெண்கலத்தையும் வென்றனர்.

இதே தொடரில் நடந்த 200 மீட்டர் பட்டர்பிளை மகளிர் பிரிவில் மற்றொரு சாதனை நிகழ்த்தப்பட்டது. ஹர்ஷிகா 2:23.60 வினாடிகளில் கடந்து, மூன்று வருடங்களுக்கு முன் அபெக்ஷா ஃபெர்னான்டஸின் 2:23.67 வினாடி சாதனையை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் ஓபனில் சாம்பியன் - பிவி சிந்துவிற்கு மற்றொரு மணிமகுடம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.