கரோனா காரணமாக பார்முலா ஒன் கார் பந்தயம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பின், கடந்த ஜூன் மாதம் ஆஸ்தியாவில் தொடங்கிய பந்தயம் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகிறது.
இதுவரை 13 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவற்றில் ஒன்பது போட்டிகளில் வெற்றிபெற்று, 282 புள்ளிகளுடன் மெர்சிடிஸ் அணியைச் சேர்ந்த லீவிஸ் ஹேமில்டன் முதல் இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், 14ஆவது கார் பந்தயம் இன்று துருக்கியில் நடைபெற்றது. கடும் மழைக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணியைச் சேர்ந்த லீவிஸ் ஹேமில்டன் முதல் இடத்தையும் ரேசிங் பாயின்ட் அணியின் செர்ஜியோ பெரேஸ் இரண்டாவது இடத்தையும் ஃபெராரி அணியின் செபாஸ்டியன் வெட்டல் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
ஆறாவது இடத்தில் இந்தப் பந்தயத்தை தொடங்கிய லீவிஸ் ஹேமில்டன், தனது அற்புதமான திறமையால் முதல் இடத்தை பிடித்தார். இதன் மூலம் லீவிஸ் ஹேமில்டன் ஏழாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை உறுதி செய்தார்.
-
LEWIS HAMILTON IS A SEVEN TIME WORLD CHAMPION!#TurkishGP 🇹🇷 #F1 pic.twitter.com/gOGfeEZxp8
— Formula 1 (@F1) November 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">LEWIS HAMILTON IS A SEVEN TIME WORLD CHAMPION!#TurkishGP 🇹🇷 #F1 pic.twitter.com/gOGfeEZxp8
— Formula 1 (@F1) November 15, 2020LEWIS HAMILTON IS A SEVEN TIME WORLD CHAMPION!#TurkishGP 🇹🇷 #F1 pic.twitter.com/gOGfeEZxp8
— Formula 1 (@F1) November 15, 2020
இதன் மூலம் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மைக்கேல் சூமேக்கரின் (ஏழு முறை உலக சாம்பியன்) சாதனையை ஹேமில்டன் சமன் செய்துள்ளார். அடுத்த பார்முலா ஒன் கார் பந்தயம் பஹ்ரைனில் வரும் நவம்பர் 29 தேதி நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: பார்முலா ஒன் கார் பந்தயம்: ரசிகர்கள் வெளியே, சுகாதார ஊழியர்கள் உள்ளே!