இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருப்பவற்றில் ’கோ-கோ’வும் ஒன்று. இந்நிலையில் இவ்விளையாட்டின் முக்கியத்துவம் இளைஞர்களின் மத்தியில் அதிகரித்து வருவதாக இந்திய கோ-கோ கூட்டமைப்பின் தலைவர் சுதான்ஷு மிட்டல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய மிட்டல், "இந்தியாவில் கோ-கோ விளையாட்டை முன்னிலைப்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவிற்கும் முதலில் நன்றியைத் தெரிவிக்கிறேன். ஏனெனில் அரசு வேலைகளின் விளையாட்டு ஒதுக்கீட்டுப் பிரிவில் கோ-கோ விளையாட்டையும் மத்திய அரசு இணைத்துள்ளது.
இதன் காரணமாக சமீப காலமாக இளைஞர்கள் மத்தில் கோ-கோ விளையாட்டின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இனி வரும் காலங்களில் கோ-கோ விளையாட்டு வீரர்கள், தங்களது எதிர்காலம் குறித்து கவலைப்படத் தேவையில்லை.
மேலும் நடப்பு ஆண்டிற்காக கோ-கோ லீக் போட்டிகள் நவம்பர் 21ஆம் தேதி முதல் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக அத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் கோ-கோ லீக்கிற்கான மாற்று தேதி அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:"தீப்பெட்டி தொழிலாளி மகன் டூ இந்திய ஜூனியர் ஹாக்கி வீரர்"