கோலாலம்பூர்: ஜூனியர் ஹாக்கியின் 13வது உலகக் கோப்பை தொடர் கடந்த 5ஆம் தேதி மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில், மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. அவை 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இதில், இந்திய அணி 'சி' பிரிவில் உள்ளது.
லீக் சுற்றின் முடிவில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி நேற்றைய முன்தினம் (டிச.12) நெதர்லாந்து அணியுடன் மோதியது. இதில், இந்திய அணி 3-4 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.
-
💔 India go down against Germany in the FIH Hockey Men's Junior World Cup Malaysia 2023 in the Semi Final.
— Hockey India (@TheHockeyIndia) December 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
We will compete for the 3rd place in the Tournament on 16th December 2023 at 3:30 PM IST.#HockeyIndia #IndiaKaGame #RisingStars #JWCMalaysia2023 pic.twitter.com/pwx9l1xLnS
">💔 India go down against Germany in the FIH Hockey Men's Junior World Cup Malaysia 2023 in the Semi Final.
— Hockey India (@TheHockeyIndia) December 14, 2023
We will compete for the 3rd place in the Tournament on 16th December 2023 at 3:30 PM IST.#HockeyIndia #IndiaKaGame #RisingStars #JWCMalaysia2023 pic.twitter.com/pwx9l1xLnS💔 India go down against Germany in the FIH Hockey Men's Junior World Cup Malaysia 2023 in the Semi Final.
— Hockey India (@TheHockeyIndia) December 14, 2023
We will compete for the 3rd place in the Tournament on 16th December 2023 at 3:30 PM IST.#HockeyIndia #IndiaKaGame #RisingStars #JWCMalaysia2023 pic.twitter.com/pwx9l1xLnS
இந்நிலையில், இன்று (டிச.12) நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்திய அணி - ஜெர்மனி அணியை எதிர்கொண்டது. இப்போட்டியின் முதல் கோலை ஜெர்மனி வீரர் ஹாஸ்பாக் பென் அடித்தார். அதன்பின் ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் இந்திய வீரரான சிர்மகோ சுதீப் கோல் அடிக்க, முதல் கால் மணி நேரத்தில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையிலிருந்தது.
இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட ஜெர்மனி அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. ஆட்டத்தில் 30வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்காக மீண்டும் ஹாஸ்பாக் பென் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து, 41 மற்றும் 58வது நிமிடங்களில் கோல் அடித்து 4-1 என்ற கணக்கில் ஜெர்மனி அணி இந்திய அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில், பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் 3-1 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. இதனால், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ் அணி வரும் 16ஆம் தேதி ஜெர்மனி அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: விஜய் ஹசாரே டிராபி : தமிழகத்தை வீழ்த்தி அரியானா முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி!