ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடர்களுக்கான தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைப்பெற்ற பெண்கள் கைப்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இத்தாலி மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.
ஆரம்பம் முதலெ விருவிருப்புடன் தொடங்கிய ஆட்டத்தில், இத்தாலி அணி 25-23, 25-17, 25-22 என்ற புள்ளிகணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.
இதையடுத்து, நேற்று நடைபெற்ற மற்றொரு தகுதி சுற்று போட்டியில் அமெரிக்க, அர்ஜெண்டினா அணிகள் மோதின. இதில் அர்ஜெண்டினாவை 25-22, 25-17, 25-13 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி ஒலிம்பிக் போட்டிகளுக்கு அமெரிக்கா தகுதி பெற்றது.
மேலும் நடைபெற்ற மற்றொரு போட்டியில் செர்பியா, போலாந்து அணிகள் மோதின. இதில் 25-21 என முதல் செட்டை போலாந்து அணியிடம் இழந்த செர்பியா 25-23, 25-16, 25,23 என்ற புள்ளி கணக்கில் மீதமுள்ள செட்களில் போலாந்து அணியை வென்று ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றது.
இதன் மூலம் ஒலிம்பிக் தொடர்களுக்கான பெண்கள் கைபந்து போட்டியில் அமெரிக்கா, செர்பியா, இத்தாலி ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.