சீனாவின் பெய்ஜிங் நகரில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடைபெற்றுவருகிறது. இதன் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சார்பாக அபிஷேக் வர்மா இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய அபிஷேக் வர்மா, 9 சுற்றுகளில் 242.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இரண்டாவது இடத்தில் ரஷ்ய வீரர் ஆர்டம் 240.4 புள்ளிகளோடு வெள்ளியும், மூன்றாவது இடத்தில் கொரியாவின் ஹான் வெண்கலம் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அபிஷேக் வர்மா தகுதிபெற்றுள்ளார். மேலும், முதன்முறையாக உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற அபிஷேக், தங்கம் வென்று சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.