ETV Bharat / sports

ஒலிம்பிக் தினத்தைக் கொண்டாட விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு - சர்வதேச ஒலிம்பிக் தினம்

ஜூன் 23ஆம் தேதி சர்வதேச ஒலிம்பிக் தினத்தைக் கொண்டாட முன்னாள் வீரர்கள், தற்போதைய வீரர்கள், விளையாட்டு சங்கங்கள் ஆகியோருக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பாக அழைப்பு விடுத்துள்ளது.

ioa-urges-oly-medallists-nsfs-to-lead-olympic-day-celebrations

author img

By

Published : Jun 21, 2020, 12:44 AM IST

சர்வதேச ஒலிம்பிக் தினம் ஜூன் 23ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஒலிம்பிக் தின கொண்டாட்டம் பற்றி ஏற்கனவே நிர்வாகக் குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளேன். பல்வேறு தரப்பிலும் இந்த நாளினைக் கொண்டாடுவோம்.

கரோனா வைரசால் வீடுகளில் இருந்தாலும், ஒலிம்பிக் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாட பல வழிகள் உள்ளன. உடற்பயிற்சிகள் மூலம் நிச்சயம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். அதேபோல் கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அரசு விதிகளை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தக் கொண்டாட்டத்தை ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்களும், பங்கேற்றவர்களும் முன்னெடுக்க வேண்டும். இதற்கு தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், விளையாட்டு வீரர்கள் சங்கம் ஆகியோர் ஒத்துழைக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஒலிம்பிக் தின கொண்டாட்டத்திற்காக பிவி சிந்து, வினீஷ் போகத் ஆகியோரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.