ETV Bharat / sports

தெற்காசிய விளையாட்டுப்போட்டி... கபடியில் தங்கங்களை வென்ற இந்தியா... பதக்கப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம் - இலங்கை அணியை வீழ்த்தி தாங்கப் பதக்கத்தை கைப்பற்றி

காத்மண்டு: நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டுத் தொடரின் கபடி போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கம் வென்று அசத்தியுள்ளது.

SouthAsianGames2019
SouthAsianGames2019
author img

By

Published : Dec 9, 2019, 8:23 PM IST

தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான 13ஆவது விளையாட்டுத் தொடர் தற்போது நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்திய அணி அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளிலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, பதக்கங்களை அள்ளி வருகிறது.

அந்த வரிசையில் இன்று நடைபெற்ற ஆடவர் கபடி இறுதிப் போட்டியில் இந்திய அணி, இலங்கை அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் வலிமை மிகுந்த இந்திய அணி 51 -18 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை அணியை வீழ்த்தி, தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியது.

இதற்கு முன்னதாக நடைபெற்ற மகளிர் கபடி இறுதிப்போட்டியில் இந்திய அணி, தொடரை நடத்தும் நேபாளம் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய இந்திய மகளிர் அணி ஆட்டநேர முடிவில் 50 - 13 என்ற புள்ளிகளின் அடிப்படையில் நேபாளத்தை வீழ்த்தி, மகளிர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றது.

  • These ladies didn't hold back and they're coming home with the prize! 🏆
    The Indian Women's Kabaddi Team win gold at #SAG2019, beating Nepal 13-50 in the Final to be crowned CHAMPIONS!

    Send them your congratulations in the replies below! pic.twitter.com/oM2upJD5wL

    — ProKabaddi (@ProKabaddi) December 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதன் மூலம் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி 134 தங்கம், 83 வெள்ளி, 43 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 264 பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறது.

இதையும் படிங்க: பீட்டாவின் விளம்பரப் படத்திற்கு ஒப்பந்தமான விளையாட்டு வீராங்கனை!

Intro:Body:

#SouthAsianGames2019; Men's team grabbed Gold

crushing Sri Lanka by 51-18 in the final at Kathmandu, Nepal

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.