ஜப்பானின் டோக்கியோ நகரில் அடுத்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த ஒலிம்பிக் போட்டியின் குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்கும் வீரர்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது டோக்கியோவில் நடைபெற்றுவருகிறது. இதில் ஆடவர் 63 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஜப்பான் வீரர் டைசூக நரிமாட்சுவை வீழ்த்தி இந்திய வீரர் சிவா தப்பா இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார்.
முன்னதாக இவர் ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் நான்கு முறை தங்கமும் உலக குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.
இதே போன்று மகளிர் 75 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா ராணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார். அவர் பிரேசில் வீராங்கனையை தோற்கடித்து இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார். பூஜா ராணி இந்தாண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.