மஸ்கட்: ஓமன் நாட்டில் ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடர் நடைபெற்றது. இந்தப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய மகளிர் அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றது. முதல் போட்டியில் மலேசியாவை வீழ்த்தியது. இதையடுத்து, இரண்டாவது போட்டியில் ஜப்பானிடம் தோல்வியடைந்து, இறுதி போட்டியில் சிங்கப்பூரை வீழ்த்தியது.
அரையிறுதி போட்டியில் தென் கொரியாவிடம் தோல்வியடைந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று மூன்றாவது இடத்துக்கான போட்டியில் சீனாவுடன் மோதியது. இந்தப் போட்டியின் முதல் பாதியில் இந்திய அணியின் குர்ஜித் கவுர், ஷர்மிளா தேவி தலா ஒரு கோல் அடித்தனர்.
சீனா எந்த கோலும் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை என்பதால், 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா மகளிர் அணி வெண்கலம் வென்றது. இறுதிப்போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தி ஜப்பான் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஞ்சி டிராபி இரு கட்டமாக நடக்கும்- ஜெய் ஷா