ETV Bharat / sports

2024ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கபடி சேர்க்கப்படுமா?

டெல்லி: 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கபடி போட்டியை சேர்க்க முழுமையான முயற்சி மேற்கொள்ளப்படும் என மத்திய விளையாட்டுத் துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

கிரண் ரிஜிஜு
author img

By

Published : Oct 8, 2019, 7:38 AM IST

இந்தியாவில் ஐபிஎல் தொடருக்குப் பின் ப்ரோ கபடி லீக் போட்டிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது வணிக ரீதியாகவும் கபடி போட்டிகள் பல்வேறு உயரங்களை எட்டிவருகிறது. இருப்பினும், ஆசியப் போட்டிகளில் முக்கிய விளையாட்டாக பார்க்கப்படும் கபடியை ஒலிம்பிக்கில் சேர்க்க முடியவில்லை.

இது குறித்து பேசிய மத்திய விளையாட்டுத் துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ”இந்தியாவின் முக்கிய விளையாட்டான கபடிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு பழமையான விளையாட்டு எவ்வாறு வளர வேண்டும் என்பதற்குக் கபடியே சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியாவின் மிக முக்கிய விளையாட்டாக இருக்கும் கபடி விளையாட்டினை, நிச்சயம் பாரிஸில் நடைபெறும் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் சேர்க்க முழுமையான முயற்சி மேற்கொள்ளப்படும்” என்றார்.

ஒரு விளையாட்டு, ஒலிம்பிக்கில் இடம்பெற வேண்டுமென்றால் அவ்விளையாட்டு குறைந்தபட்சம் ஆண்களால் நான்கு கண்டங்களில் 75 நாடுகளாலும், பெண்களால் மூன்று கண்டங்களில் 40 நாடுகளாலும் விளையாடப்பட வேண்டும். அந்த வகையில் பார்த்தோமானால் கபடி போட்டிகளுக்கு 40 நாடுகளில் தேசிய அணிகள் உள்ளன. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கபடித் தொடரில் 12 அணிகள் பங்கேற்றன. 1936ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக்கில் கபடி போட்டி இடம்பெற்றிருந்தாலும், அடுத்த ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து கபடி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: பாட்டில் கேப் சேலஞ்ச் செய்த கிரண் ரிஜிஜு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.