ETV Bharat / sports

ஆசியக்கோப்பை ஹாக்கியில் இந்தியா 16 கோல் அடித்து சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி! - இந்தோனேசியா

ஆசியக்கோப்பை ஹாக்கி தொடரில், தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்தோனேஷியாவை 16க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தி, இமாலய வெற்றி பெற்று, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

ஹாக்கி
ஹாக்கி
author img

By

Published : May 26, 2022, 10:35 PM IST

11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி, தனது கடைசி லீக்கில் இந்தோனேஷியாவை எதிர்கொண்டது.

அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற கட்டாயம் அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி களமிறங்கியது. ஆட்டத்தின் முதல் இந்திய அணி முழு ஆதிக்கம் செலுத்தியது.

முதல் பாதியில் 6க்கு பூஜ்ஜியம் என இந்திய அணி முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் மேலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் இந்தோனேஷியாவை 16க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, சூப்பர் 4 சுற்றுக்கும் தகுதி பெற்றது.

இந்தியா தரப்பில் டிப்சன் 4 கோல்களும் , சுதேவ் 3 கோல்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்திக் செல்வம் மற்றும் சுனில் , பவன் தலா 2 கோல்களும் , உத்தம் சிங், லியம் , பிரேந்திரா தலா ஒரு கோலும் அடித்து அசத்தி இருந்தனர்.

இதையும் படிங்க:Exclusive:'ஆடைக்காக விமர்சித்தவர்கள்; இப்போது பாராட்டுகிறார்கள்' - தங்கம் வென்ற வீராங்கனை நிகத் ஜரீனின் தந்தை உருக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.