ETV Bharat / sports

தெற்காசிய விளையாட்டுப்போட்டி -  தங்கம் வென்று அசத்திய புதுக்கோட்டை வீராங்கனை! - நெம்மேலிப்பட்டி கிராம காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளர்

காத்மண்டு: தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் பளுத்தூக்கும் பிரிவில் தமிழ்நாட்டின் அனுராதா பவுனுராஜ் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

Anuradha Pavnuraj
Anuradha Pavnuraj
author img

By

Published : Dec 8, 2019, 6:05 PM IST

நேபாளத் தலைநகர் காத்மண்டு, போக்ரஹாவில் நடைபெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவு பெற இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இதனிடையே இந்தத் தொடரின் முதல் நாளில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் இந்திய விளையாட்டு வீரர்கள், பதக்கங்களைக் குவித்து அசத்தியுள்ளனர்.

இதில் பளுத்தூக்குதல் பிரிவில் இந்திய அணி சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அனுராதா பவுனுராஜ் பங்கேற்றார். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அவர், மகளிர் 200 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் பளுத்தூக்குதல் பிரிவில் இந்தியா இதுவரை ஒன்பது தங்கம், ஒரு வெள்ளி என 10 பதக்கங்களைப் பெற்று அசத்தியுள்ளது.

தெற்காசியப் போட்டிகளில் தங்கம் வென்ற அனுராதா பவுனுராஜ்

தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அனுராதா பவுனுராஜ், புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி கிராம காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தெற்காசிய போட்டிகள் 2019 - 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற இந்தியா!

Intro:Body:தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்மணி அனுராதா.

தெற்காசிய விளையாட்டுப்போட்டி நேபால் நாட்டில் வாகாரா என்னுமிடத்தில் டிசம்பர் 01 முதல் 10 வரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் 07.12.2019ல் அன்று நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் 87 கிலோ எடை பிரிவில் 200 கிலோ எடையைத் தூக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டம், நெம்மேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த P.அனுராதா, காவல் உதவி ஆய்வாளர் இந்திய அணியின் சார்பாக கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். பெண்கள் பிரிவில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்று முதல் பெண்மணி என்ற பெருமை அனுராதாவையே சேரும். Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.