அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்தது. இதேபோல இரண்டாவது போட்டியிலும் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலை வகித்தது.
இந்த நிலையில் இன்று(பிப்.11) கடைசிப் போட்டியான மூன்றாவது ஒருநாள் போட்டி தொடங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 265 ரன்களை குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அப்படி 37.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனிடையே ஸ்மித் 18 பந்துகளுக்கு 3 சிக்ஸ்ர்கள் அடித்து 36 ரன்களை எடுத்தார். கடைசி விக்கெட்டாக ஜோசப் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்படி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுவதும் கைப்பற்றி, மேற்கிந்திய தீவுகள் அணியை வொய்ட் வாஷ் செய்தது.
இதையும் படிங்க: IND VS WI: இந்திய அணி 265 ரன்களுக்கு ஆட்டமிழப்பு