ஜகார்டா: 11ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் நேற்று முன்தினம் (மே 23) தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா அணிகளும், இரண்டாம் பிரிவில் மலேசியா, தென் கொரியா, வங்கதேசம், ஓமன் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்தியா - ஜப்பான் அணிகளுக்கு எதிரான போட்டி நேற்று (மே 24) நடைபெற்றது. போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஜப்பான் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. இருப்பினும், முதல் 20 நிமிடங்களில் (First Quarter) எந்த கோலும் பதிவாகாத நிலையில், இரண்டாவது குவாட்டரில் (Second Quarter) ஜப்பான் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
தொடர்ந்து, ஜப்பான் மற்றொரு கோல் அடிக்க, இந்தியாவின் ராஜ்பார் பவன் 44ஆவது கோல் அடித்து அசத்தினார். இதனால், மூன்றாவது குவார்டரில் (Third Quarter) 2-1 என்ற கணக்கில் ஜப்பான் முன்னிலை வகித்தது.
-
Some 📸 from our clash against Japan in the Hero Asia Cup 2022, which took place at the GBK Hockey field in Jakarta, Indonesia.#IndiaKaGame #HockeyIndia #HeroAsiaCup #INDvsJPN #matchday @CMO_Odisha @sports_odisha @IndiaSports @Media_SAI pic.twitter.com/3NvPFZmxr4
— Hockey India (@TheHockeyIndia) May 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Some 📸 from our clash against Japan in the Hero Asia Cup 2022, which took place at the GBK Hockey field in Jakarta, Indonesia.#IndiaKaGame #HockeyIndia #HeroAsiaCup #INDvsJPN #matchday @CMO_Odisha @sports_odisha @IndiaSports @Media_SAI pic.twitter.com/3NvPFZmxr4
— Hockey India (@TheHockeyIndia) May 24, 2022Some 📸 from our clash against Japan in the Hero Asia Cup 2022, which took place at the GBK Hockey field in Jakarta, Indonesia.#IndiaKaGame #HockeyIndia #HeroAsiaCup #INDvsJPN #matchday @CMO_Odisha @sports_odisha @IndiaSports @Media_SAI pic.twitter.com/3NvPFZmxr4
— Hockey India (@TheHockeyIndia) May 24, 2022
இதையடுத்து, நான்காவது குவார்டரில் (Fourth Quarter) ஜப்பானும், இந்தியாவும் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இரண்டாவது கோலையும் ராஜ்பார் தான் பதிவு செய்தார். ஆனால், கடைசி 7 நிமிடங்கள் இருந்தபோது, ராஜ்பாருக்கு பச்சை அட்டை கொடுக்கப்பட்டது. இதனால், அவர் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு 10 பேர் மட்டுமே ஆடினர்.
தொடர்ந்து செல்வம் கார்த்தியும் மஞ்சள் அட்டை பெற்ற நிலையில், இந்திய அணி வலுவிழந்து காணப்பட்டது. இதனால், கடைசி கட்டத்தில் இரண்டு கோல்களை ஜப்பான் அணி எளிதாக அடித்து 5 - 2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தியா, பாகிஸ்தான் அணியுடனான தனது முதல் போட்டியை டிரா செய்திருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும், நேற்று நடந்த மற்றொரு போட்டியில், இந்தோனேஷிய அணியை 13-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது.
இதனால், ஏ - பிரிவில் ஜப்பான், பாகிஸ்தான் அணிகளை தொடர்ந்து இந்திய அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியா நாளை (மே 26) நடைபெறும் இந்தோனேஷியா உடனான போட்டியில் இமாலய வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சூப்பர் - 4 சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பி - பிரிவில் மலேசியா, தென் கொரியா அணிகள் முறையே முதலிரண்டு இடங்களில் உள்ளன.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை ஹாக்கி: முதல் ஆட்டத்திலேயே தடம் பதித்த தமிழக வீரர்