ETV Bharat / sports

தங்க மங்கைக்கு ஏற்பட்ட நிலை..! கவலையில் ரசிகர்கள்..! - முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹீமா தாஸ்

டெல்லி: இந்தியாவின் நட்சத்திர தடகள வீராங்கனை ஹிமா தாஸ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் பங்கேற்க மாட்டார் என இந்திய தடகள கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Hima das ruled out
author img

By

Published : Sep 19, 2019, 10:18 AM IST

இந்தியாவின் நட்சத்திர தடகள வீரங்கனை ஹிமா தாஸ். இவர் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நோவ் மெஸ்டோ தடகள போட்டியின் 400 மீட்டர் ஓட்டத்தை 52.06 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

ஹிமா தாஸ் இந்த ஆண்டில் மட்டும் 400 மீ, 200 மீ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வெற்றி பெற்று ஐந்து தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றினார். இதன்மூலம் அவர் 2019ஆம் ஆண்டிற்கான உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியிலும் இடம்பிடித்திருந்தார்.

இந்நிலையில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்ற அதிகாரபூர்வத் தகவலை இந்திய தடகள கூட்டமைப்பு(Athletics Federation of India) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்திய தடகள கூட்டமைப்பின் இந்த ட்விட்டர் பதிவால் ஹிமா ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.