கோவிட்-19 பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார்முலா ஒன் கார் பந்தயம், கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
2020ஆம் ஆண்டின் பார்முலா ஒன் கார் பந்தயத்தின் 12ஆவது போட்டி நேற்று மாலை போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்றது. விறுவிறுப்பாக சென்ற இப்போட்டியில் மெர்சிடிஸ் அணியைச் சேர்ந்த லீவிஸ் ஹேமில்டன் முதல் இடத்தைப் பெற்றார்.
ஹேமில்டனுக்கு இது 92ஆவது வெற்றியாகும். இதன் மூலம் பார்முலா ஒன் கார் பந்தயங்களில் அதிக வெற்றிகளைப் பெற்றவர் என்ற மைக்கேல் ஷூமேக்கரின் (91 வெற்றி) சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
-
The moment @LewisHamilton clinched his record-breaking 9️⃣2️⃣nd race win#PortugueseGP 🇵🇹 #F1 pic.twitter.com/PZcA0xtEOC
— Formula 1 (@F1) October 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The moment @LewisHamilton clinched his record-breaking 9️⃣2️⃣nd race win#PortugueseGP 🇵🇹 #F1 pic.twitter.com/PZcA0xtEOC
— Formula 1 (@F1) October 25, 2020The moment @LewisHamilton clinched his record-breaking 9️⃣2️⃣nd race win#PortugueseGP 🇵🇹 #F1 pic.twitter.com/PZcA0xtEOC
— Formula 1 (@F1) October 25, 2020
இப்போட்டியில் ஹேமில்டனின் சக வீரரான வால்டேரி போடாஸ் இரண்டாவது இடத்தையும், ரெட்புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் மூன்றாவது இடத்தை பெற்றனர்.
தற்போது வரை 12 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவற்றில் எட்டில் வெற்றி பெற்று 256 புள்ளிகளுடன் மெர்சிடிஸ் அணியின் லீவிஸ் ஹேமில்டன் முதலிடத்தை பெற்றுள்ளார்.
-
History maker #PortugueseGP 🇵🇹 #F1 pic.twitter.com/kKkvJ0e5BE
— Formula 1 (@F1) October 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">History maker #PortugueseGP 🇵🇹 #F1 pic.twitter.com/kKkvJ0e5BE
— Formula 1 (@F1) October 25, 2020History maker #PortugueseGP 🇵🇹 #F1 pic.twitter.com/kKkvJ0e5BE
— Formula 1 (@F1) October 25, 2020
அவரைத் தொடர்ந்து வால்டேரி போடாஸ் 179 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 162 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இதையும் படிங்க: டோக்கியோ ஜிம்னாஸ்டிக்ஸில் சீனா பங்கேற்பது உறுதி