ETV Bharat / sports

அதிர்ச்சி கொடுத்த வெட்டல்; தூள் கிளப்பிய ஹாமில்டன்!

author img

By

Published : Jul 20, 2020, 5:14 PM IST

எஃப் 1 தொடரின் ஹங்கேரியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் மெர்சிடிஸ் அணியின் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.

hamilton-clinch-8th-hungarian-gp-title-equals-schumachers-record

எஃப் 1 தொடர் தொடங்கியுள்ள நிலையில், ஹங்கேரியன் கிராண்ட் பிரிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதன் குவாலிஃபையர் சுற்றுப் போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்றதையடுத்து, எஃப் 1 போட்டிகள் நேற்று நடந்தன. இதில் போட்டிக்கு முன்னதாக ரெட்புல் அணியின் வெர்ஸ்டெப்பனுக்கு விபத்து ஏற்பட்டது. இருப்பினும், அவர் போட்டியில் பங்கேற்றார்.

இதையடுத்து நடைபெற்ற போட்டியில் மெர்சிடிஸ் அணியின் போட்டாஸுக்கு தொடக்கத்திலேயே, காரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் பின்னடைவு ஏற்பட்டது. தொடக்கத்திலிருந்தே முன்னணியில் இருந்த மெர்சிடிஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹாமில்டன் போட்டியின் முடிவில் முதலிடத்தைப் பிடித்தார்.

முதலிடம் பிடித்த மெர்சிடிஸ் அணியின் ஹாமில்டன்

இவரைத் தொடர்ந்து அதே மெர்சிடிஸ் அணியின் போட்டாஸ் இரண்டாம் இடத்திலும், ரெட்புல் அணியின் வெர்ஸ்டப்பென் மூன்றாமிடத்தைப் பிடித்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபெராரி அணியின் செபஸ்டியன் வெட்டல் 10ஆவது இடம் பிடித்தார். இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஹாமில்டன், ஜாம்பவான் வீரர் ஸ்மாசூரின் சாதனையைச் சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்டு பயிற்சிக்குத் திரும்பிய ஜோகோவிச்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.