சென்னை: இந்தியாவில் சர்வதேச செஸ் சம்மேளனத்தின் சார்பாக வெளிடப்படும் அதிகாரப்பூர்வ ரேட்டிங் பட்டியலில் தமிழ்நாடு வீரர் குகேஷ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டி இரண்டாவது சுற்றில் அசர்பெய்ஜான் நாட்டை சேர்ந்த மிஸ்ரட்தின் இஸ்கந்தராவ் என்பவரைத் தோற்கடித்து ஃபிடே (FIDE) தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார். எனினும் Fide தரவரிசைப் பட்டியல் தற்போதுதான் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
-
It's official! Gukesh is India's #1 in the #FIDErating list!
— International Chess Federation (@FIDE_chess) September 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
🔥 The 17-year-old prodigy makes history by overtaking the five-time World Champion Vishy Anand and terminating his uninterrupted 37-year reign as India's top-rated player!
📷 Stev Bonhage pic.twitter.com/paDli9hslX
">It's official! Gukesh is India's #1 in the #FIDErating list!
— International Chess Federation (@FIDE_chess) September 1, 2023
🔥 The 17-year-old prodigy makes history by overtaking the five-time World Champion Vishy Anand and terminating his uninterrupted 37-year reign as India's top-rated player!
📷 Stev Bonhage pic.twitter.com/paDli9hslXIt's official! Gukesh is India's #1 in the #FIDErating list!
— International Chess Federation (@FIDE_chess) September 1, 2023
🔥 The 17-year-old prodigy makes history by overtaking the five-time World Champion Vishy Anand and terminating his uninterrupted 37-year reign as India's top-rated player!
📷 Stev Bonhage pic.twitter.com/paDli9hslX
கடந்த 37 ஆண்டுகளாக விஸ்வநாதன் ஆனந்த் இந்தியத் தரவரிசை பட்டியலில் நம்பர் 1 வீரராக இருந்தார். தற்போது அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை முறியடித்து குகேஷ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 17 வயதாக குகேஷ் கடந்த 2019இல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். மேலும் உலக இந்திய செஸ் வரலாற்றில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்குத் தகுதி பெற்ற மூன்றாவது இளம் வீரர் குகேஷ் என்ற சாதனை படைத்தார்
நேற்றைய உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 2.5 புள்ளிகள் பெற்று உலக செஸ் வீரர்கள் தரவரிசை பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி 9வது இடம் பிடித்தார். தற்போது விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் வீரர்கள் தரவரிசை பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார்.
இது குறித்து செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கூறும் போது ”இந்திய செஸ் வரலாற்றில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக முழுவீச்சில் செஸ் விளையாடவில்லை. இருப்பினும் எனது சாதனையை குகேஷ் முறியடித்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த வெற்றி பயணத்தில் அவருடன் பங்காற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் பல இந்திய வீரர்கள் சர்வதேச செஸ் போட்டிகளில் நன்றாக விளையாடி வருகின்றனர்” எனக் கூறினார். உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா சர்வதேச தரவரிசை பட்டியலில் 19வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Asia Cup 2023 SL VS BAN: வங்காள தேசத்தை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி..