ETV Bharat / sports

பெரும் விபத்தில் சிக்கி காயமடைந்த ரோமெய்ன் க்ரோஸ்ஜீன்... மாற்று வீரரை அறிவித்த ஹாஸ்

author img

By

Published : Dec 1, 2020, 1:08 PM IST

கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.29) பஹ்ரைன் கிராண்ட் பிக்ஸ் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய ரோமெய்ன் க்ரோஸ்ஜீன், இந்த வாரம் நடைபெறும் பந்தயத்தில் கலந்துகொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Grosjean to miss race after crash
Grosjean to miss race after crash

2020ஆம் ஆண்டுக்கான பார்முலா ஒன் பந்தயம் ஆஸ்திரியாவில் கடந்த ஜூலை மாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதன்படி இந்தாண்டிற்கான பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) நடைபெற்றது.

இந்தப் போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஹாஸ் அணியின் ரோமெய்ன் க்ரோஸ்ஜீன் பெரும் விபத்தில் சிக்கினார். இதில் அவரது கார் இரண்டாக பிளந்தது. மேலும், காரிலிருந்து எரிபொருள் வெளியேறியதால், பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

அங்கிருந்தவர்களின் உதவியுடன் காரின் உள்ளே சிக்கியிருந்த ரோமெய்ன் க்ரோஸ்ஜீன் தட்டுத்தடுமாறி வெளியேவந்தார். சிறிய தீக்காயங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட அவர், உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சை முடிந்து அவர் இன்று, மருத்துவமனையில் இருந்து திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோமெய்ன் க்ரோஸ்ஜீனின் காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் இந்த வாரம் பஹ்ரைனில் மீண்டும் நடைபெறும் பந்தயத்தில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு பதிலாக பிரேசில் நாட்டைச் சேர்ந்த பியட்ரோ ஃபிட்டிபால்டி மாற்று வீரராக அறிமுகமாவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பியட்ரோ ஃபிட்டிபால்டி
ஹாஸ் அணி மாற்று வீரராக அறிவித்துள்ள பியட்ரோ ஃபிட்டிபால்டி

பியட்ரோ ஃபிட்டிபால்டி இரண்டு முறை பார்முலா ஒன் பட்டம் வென்ற எமர்சன் ஃபிட்டிபால்டியின் பேரன் ஆவர். 24 வயதாகும் பியட்ரோ ஃபிட்டிபால்டி 2018ஆம் ஆண்டு இண்டிகார் பந்தயத்திலும் கடந்த பிப்ரவரி மாதம் பார்முலா 3 பந்தயத்திலும் பங்கேற்றவர்.

இதையும் படிங்க: ஐஎஸ்எல்: எஃப்சி கோவா - நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.