2020ஆம் ஆண்டு சீசனின் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் நேற்று (நவ. 29) நடைபெற்றது. போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களே ஆன நிலையில் ஹாஸ் அணியின் ரோமெய்ன் க்ரோஸ்ஜீன் பெரும் விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்தில் அவரது கார் இரண்டாக உடைந்தது. மேலும், காரிலிருந்து எரிபொருள் வெளியேறியதால், தீப்பற்றியது. அப்போது காரின் உள்ளே சிக்கியிருந்த ரோமெய்ன் க்ரோஸ்ஜீன் தட்டுத்தடுமாறி வெளியேறினார்.
பின்னர் அவர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடலில் ஏற்பட்ட சிறிய தீக்காயங்கள் காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இந்நிலையில் ஹாஸ் அணி தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், "பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விபத்தைத் தொடர்ந்து ஹாஸ் எஃப் 1 அணியின் ஓட்டுநர் ரோமெய்ன் க்ரோஸ்ஜீன் பஹ்ரைன் பாதுகாப்பு படை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவரது இரு கைகளின் பின்புறத்திலும் ஏற்பட்டுள்ள தீக்காயங்களுக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டுவருகிறது.
-
👍👍👍
— Romain Grosjean (@RGrosjean) November 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thank you so much for all your messages
Loving life pic.twitter.com/uTyfhTYTxP
">👍👍👍
— Romain Grosjean (@RGrosjean) November 30, 2020
Thank you so much for all your messages
Loving life pic.twitter.com/uTyfhTYTxP👍👍👍
— Romain Grosjean (@RGrosjean) November 30, 2020
Thank you so much for all your messages
Loving life pic.twitter.com/uTyfhTYTxP
க்ரோஸ்ஜீனை இன்று (நவ. 30) ஹாஸ் எஃப் 1 அணியின் அணியின் தலைமை நிர்வாகி குந்தர் ஸ்டெய்னர் நேரில் சென்று சந்தித்தார். க்ரோஸ்ஜீ நாளை (டிச. 1) மருத்துவமனையிலிருந்து திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தில் இணைந்த 4 குத்துச்சண்டை வீரர்கள்!