ETV Bharat / sports

இறுதிச்சுற்றில் வாகை சூடுவார்களா இந்திய வீரர்கள்? - Chinappa

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய நட்சத்திரங்களான ஜோஷ்னா சின்னப்பா, சவுரவ் கோஷல் ஆகியோர் களமிறங்கும் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.

இறுதிச்சுற்றில் ஜோஷ்வா சின்னப்பா, சவுரவ் கோஷல்
author img

By

Published : May 5, 2019, 11:52 AM IST

Updated : May 5, 2019, 1:00 PM IST

2019ஆம் ஆண்டுக்கான ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றுவருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில், இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, மலேசிய வீராங்கனை சிவசங்கிரி சுப்பிரமணியமுடன் மோதினார். இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஷ்னா 11-7,12-10,11-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் கோஷல், மலேசிய வீரர் இங் யென் யோவ் 11-2, 11-6,11-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்நிலையில், இன்று மாலை நடைபெறும் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஹாங்காங் வீராங்கனை அன்னி அயுவை, ஜோஷ்னா சின்னப்பா எதிர்கொள்கிறார். இதேபோன்று, ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஹாங்காங் வீரர் லீயோ அயு உடன் சவுரவ் கோஷல் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளார்.

இந்த இறுதிப்போட்டியில், இந்தியாவை சேர்ந்த இவர்கள் இருவரும் வெற்றிபெறுவார்கள் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Intro:Body:Conclusion:
Last Updated : May 5, 2019, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.