ETV Bharat / sports

கோஸ்டாரிகாவை வீழ்த்தியும் தொடரில் இருந்து வெளியேறிய ஜெர்மனி - Germany defeated Costa Rica

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கோஸ்டாரிகாவை 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வீழ்த்தியது. ஜெர்மனி வெற்றிபெற்ற போதும் புள்ளி பட்டியலில் குறைந்த புள்ளிகளை பெற்றதால், தொடரில் இருந்து வெளியேறியது.

கோஸ்டாரிகாவை வீழ்த்தியது ஜெர்மனி அணி
கோஸ்டாரிகாவை வீழ்த்தியது ஜெர்மனி அணி
author img

By

Published : Dec 2, 2022, 8:02 AM IST

Updated : Dec 2, 2022, 9:23 AM IST

தோகா: அல் பைட் ஸ்டேடியத்தில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து 'இ' பிரிவு லீக் ஆட்டத்தில் ஜெர்மனி, கோஸ்டாரிகா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் ஜெர்மனி வீரர் செர்ஜ் நாப்ரி தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார்.

முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியின் 58 ஆவது நிமிடத்தில் கோஸ்டாரிகா அணி வீரர் எல்ட்சின் தேஜேடா முதல் கோலை அடித்து போட்டியை சமன் பெற செய்தார். சக அணி வீரர் வர்காஸ் 70 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.

ஆட்டத்தின் 73 மற்றும் 85 ஆவது நிமிடங்களில் ஜெர்மனி அணி வீரர் காய் ஹேவர்ட்ஸ் இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். சக அணி வீரரான நிக்லஸ் புல்க்ரூக் மற்றொரு கோலை அடிக்க, ஆட்டம் ஜெர்மனிக்கு சாதகமாக திரும்பியது.

ஆட்டத்தில் கோஸ்டாரிகா அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஆட்ட முடிவில் கோஸ்டாரிகாவை 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வீழ்த்தியது. ஜெர்மனி வெற்றிபெற்ற போதும் புள்ளி பட்டியலில் குறைந்த புள்ளிகளை பெற்றதால், தொடரில் இருந்து வெளியேறியது.

இதையும் படிங்க: உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் அணியை வீழ்த்தியது ஜப்பான்

Last Updated : Dec 2, 2022, 9:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.