ETV Bharat / sports

French Open 2022: மீண்டும் சாம்பியனான 'களிமண் கிங்' நடால்! - 22nd Grandslam for Nadal

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டை நேர் செட்டுகளில் வீழ்த்தி, ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் அபார வெற்றி பெற்றார். இது அவரின் 14ஆவது பிரெஞ்சு ஓபன் பட்டம், 22ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

French open 2022
French open 2022
author img

By

Published : Jun 5, 2022, 9:07 PM IST

Updated : Jun 5, 2022, 10:04 PM IST

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள புகழ்பெற்ற ரோலண்ட் கரோஸ் மைதானத்தில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் 2022 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் 5ஆம் நிலை வீரர் ரஃபேல் நடால், நார்வேவின் இளம் வீரர் கேஸ்பர் ரூட் உடன் இன்று (ஜூன் 5) மோதினார்.

இதில், ஆரம்பத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய நடால் 6-3, 6-3, 6-0 என்ற நேர் செட்களில் ரூட்டை வீழ்த்தி தனது 14ஆவது முறையாக பிரெஞ்சு ஓபன் கோப்பையை கைப்பற்றியுள்ளார். 'களிமண் தரை ஆடுகளங்களின் அரசன்' என்றழைக்கப்படும் நடால் இந்த வெற்றியின் மூலம் தனது 22ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

நட்சத்திர வீரர்களான ரோஜர் ஃபெடரர், நோவாக் ஜோகோவிச் ஆகியோர் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். இதுவரை டென்னிஸின் ஓபன் எராவில் (Open Era), அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவர், நடால் ஆவார். இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் தொடரை நடால் வென்றிருந்தார்.

தற்போது, பிரெஞ்சு ஓபன் தொடரையும் வென்றுள்ள அவர், இம்மாத இறுதியில் தொடங்க இருக்கும் விம்பிள்டன் தொடரிலும், ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் நடைபெறும் அமெரிக்க ஓபன் தொடரிலும் வெல்ல வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: பிரெஞ்சு ஒபன்; மகளிர் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் பட்டம்

Last Updated : Jun 5, 2022, 10:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.