ETV Bharat / sports

இலவச கூடைப்பந்தாட்டப் பயிற்சி முகாம் - மாணவர்கள் ஆர்வம்!

author img

By

Published : Jan 2, 2020, 4:55 PM IST

நாகப்பட்டினம்: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டுக் கழகம் சார்பில் ஏழு நாள் இலவச கூடைப்பந்தாட்ட விளையாட்டுப் பயிற்சி முகாம் நிறைவுபெற்றது.

Free Basketball Training Camp
Free Basketball Training Camp

நாகப்பட்டினம் மாவட்டத்தில், லிபர்டி கூடைப்பந்தாட்டக் கழகம் மற்றும் மாவட்ட விளையாட்டுக் கழகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஏழு நாள் இலவச விளையாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற கூடைப்பந்தாட்டப் பயிற்சி முகாமில் 5ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் 60க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் இதில் பங்கேற்றனர்.

பயிற்றுநர்கள் வழங்கிய பயிற்சிகளை முடித்த மாணவ, மாணவிகளுக்கு இறுதி நாளான இன்று சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், சீருடை மற்றும் விளையாட்டு பந்துகளை லிபர்டி கூடைப்பந்தாட்டக் கழக நிர்வாகிகள் வழங்கிப் பாராட்டினர்.

இலவச கூடைப்பந்தாட்ட முகாம் நிறைவு

விடுமுறை நாட்களை வீட்டிலிருந்து வீணாக கழிக்காமல், உடல் ஆரோக்கியத்திற்காக கூடைப்பந்தாட்டத்தைத் தேர்ந்தெடுத்து மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பயிற்சி முகாமில் பங்கேற்றது பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 16 மாதங்களுக்குப் பிறகு டி20யில் ரிஎன்ட்ரியாகும் மேத்யூஸ்

Intro:பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கூடைப்பந்தாட்ட விளையாட்டு பயிற்சி முகாம், மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு: Body:பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கூடைப்பந்தாட்ட விளையாட்டு பயிற்சி முகாம், மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு:

நாகப்பட்டினத்தில் லிபர்டி கூடைப்பந்தாட்ட கழகம் மற்றும் மாவட்ட விளையாட்டு கழகம் சார்பில் 7 நாட்கள் இலவச விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாமில் 5 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் 60 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் இதில் பங்கேற்றனர். பயிற்றுநர்கள் வழங்கிய பயிற்சிகளை முடித்த மாணவ, மாணவிகளுக்கு இறுதி நாளான இன்று சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், சீருடை மற்றும் விளையாட்டு பந்துகளை லிபர்டி கூடைப்பந்தாட்ட கழக நிர்வாகிகள் வழங்கி பாராட்டினர். விடுமுறை நாட்களை வீட்டிலிருந்து வீணாக கழிக்காமல், உடல் ஆரோக்கியத்திற்காக கூடைப்பந்தாட்டத்தை தேர்ந்தெடுத்து மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பயிற்சி முகாமில் பங்கேற்றது பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.