ETV Bharat / sports

ஜூலையில் தொடங்கும் ஃபார்முலா 1 சீசன்...!

2020ஆம் ஆண்டுக்கான ஃபார்முலா 1 சீசன் ஜூலை மாதம் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

formula-1-confirms-first-8-races-of-revised-2020-calendar-season-to-start-with-austrian-gp

author img

By

Published : Jun 2, 2020, 10:17 PM IST

கரோனா வைரஸ் காரணமாக உலகின் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே பார்வையாளர்களின்றி கால்பந்து போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 2020ஆம் ஆண்டுக்கான ஃபார்முலா 1 சீசன் நடப்பதற்கு ஏற்ற வகையில் காலண்டர் திருத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த சீசனின் முதல் சில போட்டிகளில் ரசிகர்களின்றி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் சூழல் கட்டுக்குள் வந்த பின் ரசிகர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

இந்த சீசனுக்கான ஃபார்முலா 1 தொடர் ஜூலை மாதம் 5ஆம் தேதி ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் தொடரோடு தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஹங்கேரியன் கிராண்ட் பிரிக்ஸ் தொடர் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஸ்பானிஷ், பெல்ஜியன், இத்தாலி ஆகிய கிராண்ட் பிரிக்ஸ் தொடர்கள் நடக்கவுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.