கொல்கத்தா : 70 வயதான சுபாஷ் பௌமிக் மனைவி, மகன் மற்றும் மகளுடன் கொல்கத்தாவில் உள்ள வீட்டில் வசித்துவந்தார்.
கால்பந்து முன்னாள் நட்சத்திரமான சுபாஷ் பௌமிக், 2003ஆம் ஆண்டில் கிழக்கு வங்காளத்தை ஆசியான் அமைப்பிற்கு வழிநடத்தியதில் முக்கிய நபராக இருந்தார்.
1970 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய கால்பந்து அணியில் உறுப்பினராகவும் இருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக சுபாஷ் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. முன்னதாக பௌமிக் 2005ஆம் ஆண்டு மத்திய கலால் துறையில் பணியாற்றியபோது லஞ்ச புகாரில் சிக்கினார்.
இவர் 1979ஆம் ஆண்டு கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : மெஸ்ஸி உள்பட 4 பிஎஸ்ஜி வீரர்களுக்கு கரோனா!