ETV Bharat / sports

தங்கம் வென்ற செஸ் வீராங்கனை துரோணாவள்ளி ஹரிகாவின் சிறப்பு பேட்டி

author img

By

Published : Sep 2, 2020, 8:36 PM IST

ஃபைய்ட் (FIDE )எனப்படும் சர்வதேச செஸ் ஃபெடரேஷன் சார்பில் ஞாயிறு அன்று நடந்த ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ரஷ்யா அணியுடன் இந்திய அணி வெற்றியை பகிர்ந்து கொண்டது. இந்திய அணியில் விளையாடிய இந்திய நட்சத்திர செஸ் வீராங்கனை துரோணாவள்ளி ஹரிகா, ஈடிவி பாரத்துக்கு இந்திய அணியின் வெற்றிப்பயணம் குறித்து பேட்டியளித்தார்.

Dronavalli Harika
Dronavalli Harika

ஃபைய்ட் ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி முதன்முதலாக தங்க பதக்கம் பெற்றதன் மூலம் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒரு புதிய வரலாற்றை படைத்துள்ளது. இரண்டு விளையாட்டுகளின் போது இன்டர்நெட் இணைப்பு தடங்கல் காரணமாக, இந்திய அணியானது ரஷ்ய அணியுடன் பகிர்ந்து கொண்ட மற்றொரு முதல் வெற்றியாகும்.

2014ஆம் ஆண்டின் வெண்கலம் 2020இல் தங்கமாக மாறியதன் ரகசியம் என்ன? எப்படி இதனை உணர்கிறீர்கள்?

செஸ் ஒலிம்பியாட்டில் முதன்முறையாக நாடு தங்கம் வென்றிருப்பதை உண்மையில், உண்மையில் (இரண்டு முறை அழுத்தமாக சொல்கிறார்) கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயமாக உணர்கின்றேன். இந்தியா முதன்முதலாக தங்கம் வென்ற அணியில் இடம் பெற்றிருந்தது எப்போதுமே என் நினைவில் இருக்கக் கூடிய தருணமாகும். இந்த வெற்றியானது எதிர்கால சந்ததியினர் நாட்டுக்காக மேலும் அதிக பதக்கங்களை வெல்லும் வகையில் ஈர்க்கக்கூடியதாக இருக்கும் என்றும் நான் நம்புகின்றேன். கரோனா பெருந்தொற்று காரணமாக முதன்முறையாக இந்தப் போட்டி ஆன்லைனில் நடைபெற்றிருக்கிறது.

அந்த அனுபவம் உங்களுக்கு எப்படி இருந்தது, வழக்கமான விளையாட்டில் இருந்து எந்த வகையில் வித்தியாசமாக இருந்தது?

போர்டு விளையாட்டில் இருந்து கொஞ்சம்தான் இதில் வித்தியாசம் இருந்தது என்று என்னால் சொல்ல முடியும். நாம் தொடர்ந்து கம்ப்யூட்டர் திரையையே பார்த்துக் கொண்டு, அதோடு பொருந்தி விளையாட வேண்டி இருந்ததால் ஆன்லைனில் விளையாடுவது மேலும் அதிக களைப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், எதிர்காலத்தில் நடக்கும் போட்டிகளும் ஆன்லைனில் விளையாடப்படும் என்பதால் நாம் மெதுவாக அதனை உபயோகிக்கத் தொடங்க வேண்டும். சொந்த நாட்டில் இருந்து நம்மை நாம் நிரூபிக்க இது நமக்குக் கொடுக்கப்பட்ட வித்தியாசமான வாய்ப்பாகும். இது எங்களுக்கு மிகவும் சாதகமான தொடக்கத்தைக் கொடுத்திருக்கிறது.

போட்டியைப் பற்றிச் சொல்லுங்கள். 160க்கும் மேற்பட்ட நாடுகள் ஆன்லைனில் பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வெல்வது எவ்வளவு கடினமாக இருந்தது?

இந்த போட்டி மிகவும் கடினமாக இருந்தது. பொதுவாக, நாம் போர்டில் விளையாடும்போது ஆயிரக்கணக்கானோர் அதில் பங்கேற்பார்கள். இது செஸ் விளையாட்டில் மிகவும் வலுவான போட்டிகளில் ஒன்றாக இருக்கிறது. குழு பிரிவில் நாங்கள் சீனாவுக்கு எதிராக விளையாடினோம். அவர்கள் உலகிலேயே வலுவான அணியாக இருக்கின்றனர். அவர்களை வென்றபிறகு எங்களுக்குள் நம்பிக்கை வலுப்பெற்றது. நமது அணியின் ஒற்றுமை, நல்ல குழுக்களை வெல்ல நமக்கு உதவியாக இருந்தது.

துரோணாவள்ளி ஹரிகாவின் சிறப்புப் பேட்டி

போட்டியில் உங்கள் பயணம், கொனேரு ஹம்பி, ஹரி கிருஷ்ணா மற்றும் இதர உங்கள் அணியை சார்ந்தவர்களிடம் பங்கேற்று விளையாடியது பற்றி சொல்லுங்கள்?

அணியில் நாங்கள் 12 பேர் இடம்பெற்றிருந்தோம். இதில் மூன்று பேர் தெலுங்கு பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். நாட்டுக்காக பல போட்டிகளில் பங்கேற்று விளையாடியபோதே பல ஆண்டுகளாக எங்கள் மூவரையும் ஒருவருக்கு ஒருவர் தெரியும். நாங்கள் தெலுங்கு மாநிலங்களில் இருந்து நாட்டுக்காகப் பங்கேற்றது எங்களுக்கு மிகவும் பெருமை அளிக்கும் தருணமாக இருந்தது. நேஷன் கோப்பை போட்டியில் தோற்றதில் இருந்து மீண்டு வந்தது அணிக்கு எவ்வளவு தூரத்துக்குச் சிக்கலாக இருந்தது.

நேஷன் கோப்பை மற்றும் ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் இரண்டும் வித்தியாசமான செஸ் போட்டிகளாகும். ஒலிம்பியாட் சிறப்பான ஒன்றாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரிந்துதான் இருந்தது. எனவே, அதில் வெற்றி பெறுவதற்காக நாங்கள் கடின உழைப்பை பயிற்சியை மேற்கொண்டோம். நேஷன் கோப்பை அனுபவமும் செஸ் ஒலிம்பியாட் வெற்றிக்கு உதவியாக இருந்தது.

தவிர இந்திய ஜூனியர்களும் போட்டியில் நன்றாகவே விளையாடினர். செஸ் விளையாட்டில் இந்தியாவின் எதிர்காலம் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?

இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் விளையாடுவது என்பது ஜூனியர்களுக்கு கிடைத்த ஒரு அற்புதமான வாய்ப்பாகவே கருதுகின்றேன். வெவ்வேறு வித்தியாசமான குழுக்களுடன் விளையாடுவதை விடவும், அனைத்து குழுக்களும் இணைந்து விளையாடுவது என்ற முடிவுக்கு எப்போதுமே நான் முழுமையாக ஆதரவு தெரிவிக்கின்றேன். இது அவர்களின் விளையாட்டை மேம்படுத்துவதாக இருக்கும். எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட அவர்களை ஊக்கப்படுத்தும். மேலும் அவர்கள் நம் நாட்டுக்காக பல அதிசயங்களை நிகழ்த்துவார்கள் என்று நான் நம்புகின்றேன்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.