லண்டன்: விம்பிள்டன் 2022 தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நேற்று (ஜூலை 9) நடைபெற்றது. இதில், உலகின் 2ஆம் நிலை வீராங்கனையும், துனிசியாவை சேர்ந்தவருமான ஓன்ஸ் ஜபீர், உலகின் 23ஆம் நிலை வீராங்கனையும், கஜகஜஸ்தான் நாட்டைச் சேர்ந்த எலினா ரைபாகினா உடன் மோதினார். இருவரும் ஒருமுறை கூட பட்டம் வென்றதில்லை என்பதால், அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.
போட்டியின் முதல் செட்டை ஜபீர் (3 - 6) வென்று முன்னிலை பெற்றார். ஆனால், இரண்டாவது செட் முதல் எலினா தனது வேகத்தை அதிகரித்து புள்ளிகளை பெற தொடங்கினார். இதனால், அடுத்தடுத்த இரண்டு செட்களை வென்று (6-2, 6-2) ரைபாகினா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
-
"They would be super proud" 😊
— Wimbledon (@Wimbledon) July 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Elena Rybakina was asked how her parents would react to her being crowned Wimbledon champion#Wimbledon | #CentreCourt100 pic.twitter.com/HOKUL4pFfQ
">"They would be super proud" 😊
— Wimbledon (@Wimbledon) July 9, 2022
Elena Rybakina was asked how her parents would react to her being crowned Wimbledon champion#Wimbledon | #CentreCourt100 pic.twitter.com/HOKUL4pFfQ"They would be super proud" 😊
— Wimbledon (@Wimbledon) July 9, 2022
Elena Rybakina was asked how her parents would react to her being crowned Wimbledon champion#Wimbledon | #CentreCourt100 pic.twitter.com/HOKUL4pFfQ
23 வயதான எலினா, தனது வெற்றி குறித்து கூறும்போது,"என்ன செய்வது என்றே தெரியவில்லை. மைதானத்தில் பேசும்போதே அழுதுவிடுவேன் என நினைத்தேன். ஆனால், எப்படியோ அழுகையை அடக்கிக்கொண்டேன். ஒருவேளை, தனியாக அறைக்கு சென்றபின் இடைவிடாமல் அழுவேன் என்றே தோன்றுகிறது" என்றார். பின்னர், அவரின் பெற்றோர் குறித்த கேள்விக்கு," அவர்கள் மிகவும் பெருமைப்படுவார்கள்" என கூறி ஆனந்த கண்ணீர் வடித்தார்.
இதையும் படிங்க: ENG vs IND: தொடரை வென்றது இந்தியா - புவியின் புதிய சாதனை