டெல்லி: இந்திய நட்சத்திர தடகள வீராங்கனை டூட்டி சந்த், தன்னுடைய நீண்ட காதலியான மோனாலிசாவுடன் திருமண உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்துடன் "நேற்று உன்னை நேசித்தேன், இன்றும் உன்னை நேசிக்கிறேன், எப்போதும் வேண்டும், எப்போதும் நேசிப்பேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை வைத்து இருவரும் திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. ஆனால், இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை, டூட்டி சந்த்தின் நெருங்கிய உறவினரின் திருமண விழாவின்போது ஜோடியாக புகைப்படம் எடுத்துக்கொண்டாக கூறப்படுகிறது. ஒடிசாவை சேர்ந்த டூட்டி சந்த் (24) ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றவர்.
-
“Loved you yesterday, love you still, always have, always will.” pic.twitter.com/1q3HRlEAmG
— Dutee Chand (@DuteeChand) December 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">“Loved you yesterday, love you still, always have, always will.” pic.twitter.com/1q3HRlEAmG
— Dutee Chand (@DuteeChand) December 2, 2022“Loved you yesterday, love you still, always have, always will.” pic.twitter.com/1q3HRlEAmG
— Dutee Chand (@DuteeChand) December 2, 2022
குறிப்பாக தான் ஒரு தன்பால் ஈர்ப்பாளர் என்பதை வெளிப்படையாக அறிவித்தவர். ஒடிசாவை சேர்ந்த மோனாலிசாவை காதலிப்பதாக 2019ஆம் ஆண்டு மே மாதம் அறிவித்தார். இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: உயர் மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க அனுமதி