2014, 2018 ஆகிய ஆண்டுகளில் நடந்த காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் சஞ்சிதா சானு. 2017ஆம் ஆண்டு இவருக்கான அர்ஜுனா விருது பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது. இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனிடையே 2017ஆம் ஆண்டு நடந்த பளுதூக்கு போட்டியின்போது சஞ்சிதா சானு ஊக்கமருந்து பயன்படுத்தியாகக் கூறி, சஞ்சிதா சானுவுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்தில் மேல் முறையீடு செய்த சஞ்சிதா சானுவுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது. இதையடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட தடை முடிவுக்கு வந்தது.
இதனிடையே டெல்லி உயர் நீதிமன்றம் அர்ஜுனா விருதுக்கான பரிசீலனை குறித்த மத்திய அரசின் முடிவை சீல் செய்யப்பட்ட கவரில் வைக்க உத்தரவிட்டிருந்தது.

தற்போது இவருக்கு ஆதரவான தீர்ப்பு வந்துள்ளதையடுத்து, 2018ஆம் ஆண்டிலிருந்து நிலுவையிலுள்ள அர்ஜுனா விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Exclusive: ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி யார் சிறந்த பேட்ஸ்மேன்? - மோன்டி பனேசர் பதில்!