திருச்சி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினரும், மாநில கைப்பந்து கழக புரவலருமான மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கிவைத்தார்.
இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆடவர் பிரிவில் 15 அணிகளும், மகளிர் பிரிவில் 10 அணிகளும் கலந்துகொண்டன. இதில் மகளிர் பிரிவில் பிஷப் ஹீபர் கல்லூரி அணி, 26-24, 25-19 என்ற கணக்கில் ஹோலிகிராஸ் கல்லூரி அணியை வீழ்த்தி கோப்பையைத் தட்டிச்சென்றது.
ஆடவர் பிரிவில் ஜமால் முகமது கல்லூரி அணியும், தூய வளனார் கல்லூரி அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. மகளிர் பிரிவில் முதல் பரிசை வென்ற பிஷப் ஹீபர் கல்லூரி அணிக்கு மகேஷ் பொய்யாமொழி கோப்பை வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட கைப்பந்து கழகத்தின் மாவட்டத் தலைவர் தங்க பிச்சையப்பா, செயலாளர் கோவிந்தராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அரியலூர் மாவட்ட வாலிபால் போட்டி: 26 அணிகள் பங்கேற்பு!