ETV Bharat / sports

பல் மருத்துவத்திலிருந்து பவர் லிஃப்டிங் வரை - தங்கம் வென்ற வீர மங்கை ஆரத்தி அருணின் பேட்டி! - பவர் லிஃப்டர் ஆரத்தி அருண்

காலையில் பல் மருத்துவராகவும், பிற்பகலில் இரு பிள்ளைகளுக்குத் தாயாகவும், மாலையில் பவர் லிஃப்டராக புதிய பரிணாமத்தை எடுத்து தினமும் 3 மணிநேரம் பயிற்சி எடுத்துள்ளார். அதன் மூலம், மூன்றே வருடத்தில் இந்தியாவுக்கு ஐந்து தங்கப்பதக்கங்களை பெற்றுத் தந்துள்ளார் இந்த வீர மங்கை ஆரத்தி அருண் .

Arathi Arun
author img

By

Published : Sep 29, 2019, 8:10 AM IST

Updated : Sep 29, 2019, 7:12 PM IST

பவர் லிஃப்டிங்பெயரில் உள்ளது போல் பவர் கொடுத்து எடையை லிப்ட் செய்யும் போட்டி. உடலில் உள்ள பலத்தை அடிப்படையாகக் கொண்டு போராடும் போட்டி என்றாலும் மன வலிமையை மூலதனமாக வைத்து இந்தப் போட்டியில் தங்கம் வென்று தடம் பதித்துள்ளார் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ஆரத்தி அருண். கனடாவில் இந்தாண்டு நடைபெற்ற காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, இவர் மொத்தம் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கே பெருமை தேடி தந்துள்ளார்.

Arathi Arun
காமென்வெல்த்தில் தங்கம் வென்ற ஆரத்தி அருணின் பதக்கங்கள்

அடிப்படையில் பல் மருத்துவரான இவர், மகப்பேறுக்குப் பின் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்த போதுதான் பவர் லிஃப்டிங் பயணத்தைத் தொடங்கியுள்ளார். ஒரு குடும்பப் பெண் இந்தப் போட்டியில் ஈடுபாட்டை செலுத்தியபோது அனைத்து தரப்பிலிருந்தும் வழக்கம்போல் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அந்த எதிர்ப்புகளை தனது நம்பிக்கை மூலம் கடந்து வந்துள்ளார் ஆரத்தி அருண்.

காலையில் பல் மருத்துவராகவும், பிற்பகலில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகவும் பயணித்துக் கொண்டிருக்கும் ஆரத்தி அருண், மாலையில் பவர் லிஃப்டராக புதிய பரிணாமத்தை எடுத்து தினமும் 3 மணிநேரம் பயிற்சி எடுத்துள்ளார். அதன் பலன், மூன்றே வருடங்களில் இந்தியாவுக்கு ஐந்து தங்கப்பதக்கங்களை பெற்றுத் தந்துள்ளார் இந்த வீர மங்கை, ஆரத்தி அருண் .

ஆரத்தி அருணின் பயிற்சி

இவரது மகன் ஒரு கிக் பாக்சர் ஆவார். அவர், ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலம் வென்றவர். எனவே தனது தாய் நம்பிக்கையை இழக்கும் தருணங்களில் ஒரு மகனாகவும், விளையாட்டு வீரராகவும் பக்கபலமாக இருந்து ஆரத்தி அருணை ஊக்கப்படுத்தியுள்ளார்.

ஆரத்தி அருண்

தங்கம் வென்று சென்னை திரும்பிய ஆரத்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் மாநில அளவில் தேசிய அளவில் சாதித்தபோதும் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து போதிய ஊக்கமும் அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என்று நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரேத்யேக பேட்டியில் ஆரத்தி வருத்தம் தெரிவிக்கிறார்.

அனைத்து விளையாட்டுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கி அனைத்து வீரர், வீராங்கனைகளையும் அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்று கூறும் ஆரத்தி அருண், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்வதே தன்னுடைய அடுத்த இலக்கு என்று கூறுகிறார்.

சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவிற்கு என்று தனியிடம் உள்ளது. அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொண்டு இன்னும் பல சாதனைகளைப் படைக்க விடாமுயற்சியுடன் போராடிக் கொண்டிருக்கும் ஆரத்தி அருண் போன்ற அனைத்து வீரர் வீராங்கனைகளையும் அரசாங்கம் அங்கீகரித்து ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:

காமன்வெல்த் வலு தூக்குதலில் 5 தங்கப் பதக்கங்களை வென்ற தமிழச்சி!

Intro:Body:பவர் லிப்டிங்.  பெயரில் உள்ளது போல் பவர் கொடுத்து எடையை லிப்ட் செய்யும் போட்டி. உடலில் உள்ள பலத்தை அடிப்படையாக கொண்டு போராடும் போட்டி என்றாலும் மன வலிமையை மூலதனமாக வைத்து இந்தப் போட்டியில் தங்கம் வென்று தடம் பதித்துள்ளார் சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஆரதி அருண். கனடாவில் இந்தாண்டு நடைபெற்ற காமன்வெல்த் பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ஆரதி அருண் மொத்தம் ஐந்து தங்கப்பதக்கங்களை வென்று இந்தியாவுக்கே பெருமை தேடி தந்துள்ளார்.

ஆரதி அருண் அடிப்படையில் ஒரு பல் மருத்துவர். மகப்பேறுக்கு பின் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்த போது பவர்லிப்டிங் பயணத்தை தொடங்கியுள்ளார். ஒரு குடும்ப பெண் பவர்லிப்டிங்கில் ஈடுபட தொடங்கிய போது அனைத்து தரப்பிலிருந்தும் வழக்கம்போல் எதிர்புகள் கிளம்பியுள்ளது. அந்த எதிர்புகளை ஒரு வசனம் பேசி கடந்து வந்துள்ளார் ஆரதி அருண்.

காலையில் பல் மருத்துவராக, பிற்பகலில் இரு பிள்ளைகளுக்கு தாயாக பயணித்து கொண்டிருந்த ஆரதி அருண் மாலையில் பவர்லிப்டராக புதிய பரிணாமத்தை எடுத்து தினமும் 3 மணிநேரம் பயிற்சி எடுத்துள்ளார். அதன் விளைவாக மூன்றே வருடத்தில் இந்தியாவுக்கு ஐந்து தங்கப்பதக்கங்களை பெற்று வந்துள்ளார்.

ஆரதியின் மகன் ஒரு கிக் பாக்சர் ஆவார். எனவே ஆரதி நம்பிக்கையை இழக்கும் தருணங்களில் அவருடைய மகன் பக்கபலமாக இருந்து அவரை ஊக்கப்படுத்தியுள்ளார்.
தங்கம் வென்று சென்னை திரும்பிய ஆரதிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் மாநில அளவில் தேசிய அளவில் சாதித்தபோது மத்திய, மாநில அரசுகளிடமிருந்து போதிய ஊக்கமும் அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என்று ஆரதி வருத்தம் தெரிவிக்கிறார். 

அனைத்து விளையாட்டுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கி அனைத்து வீரர், வீராங்கனைகளையும் அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்று கூறும் ஆரதி அருண் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்வதே தன்னுடைய அடுத்த இலக்காக நிர்ணயித்துள்ளார்.

சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவிற்கு என்று தனியிடம் உள்ளது. அந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டு இன்னும் பல சாதனைகளை படைக்க விடாமுயற்சியுடன் போராடிக் கொண்டிருக்கும் அனைத்து வீரர் வீராங்கனைகளையும் அரசாங்கம் அங்கீகரித்து ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. 
Conclusion:
Last Updated : Sep 29, 2019, 7:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.