ETV Bharat / sports

கோ-கோ கேப்டனுக்கு உதவிய டெல்லி போலீஸ்!

கரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் ரேஷன் வாங்க முடியாமல்கூட தவித்து வருவதாக கூறிய இந்திய மகளிர் கோ-கோ அணி கேப்டன் நஸ்ரினுக்கு, டெல்லி காவல் துறையினர் அத்தியாவசிய பொருள்களை வழங்கி உதவி செய்துள்ளனர்.

Delhi Police provide ration to national Kho-Kho skipper Nasreen

author img

By

Published : Apr 27, 2020, 10:03 AM IST

Updated : Apr 27, 2020, 12:11 PM IST

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்களால் அத்தியாவசிய பொருள்கள்கூட வாங்க முடியவில்லை, குறிப்பாக ரேஷன் பொருள்கள் வாங்குவதற்குக்கூட போராட வேண்டியுள்ளது என்று இந்திய மகளிர் கோ-கோ அணியின் கேப்டன் நஸ்ரின் சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

மேலும், தனது பிரச்னைகளை தேசிய கோ-கோ கூட்டமைப்பு கண்டுகொள்ளவில்லை என்றும், அதனால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ட்விட்டரில் தனது பிரச்னைகள் குறித்து தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து நஸ்ரினின் பதிவு நாடு முழுவதும் வேகமாக பரவத்தொடங்கியதுமே, இந்திய கோ-கோ கூட்டமைப்பு நஸ்ரினின் வங்கி கணக்கிற்கு ஒரு லட்சம் ரூபாய் அவசரத் தொகையாக செலுத்தியது.

இதையடுத்து காவல் துறை சார்பில், நஸ்ரின் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல் துறையும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘நஸ்ரினின் பதிவு குறித்து தகவலறிந்ததும் நாங்கள் அவரது வீட்டிற்கு சென்றோம். அவர் ஒரு வாடகை வீட்டில் குடியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நாங்கள், அவர் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், முகக்கவசங்கள், கிருமி நாசினிகள் ஆகியவற்றை வழங்கியுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:சச்சின் டெண்டுல்கர் தான் என்னுடைய முன் மாதிரி - ஹீமா தாஸ்!

Last Updated : Apr 27, 2020, 12:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.