ETV Bharat / sports

'பெனால்டி ஷூட் அவுட்' குரோஷியா காலிறுதிக்கு முன்னேறியது - ஜப்பானை வென்ற குரோஷியா

பெனால்டி ஷூட் அவுட் முறையில் குரோஷியா அணி 3-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

குரோஷியா காலிறுதிக்கு முன்னேறியது
குரோஷியா காலிறுதிக்கு முன்னேறியது
author img

By

Published : Dec 6, 2022, 7:16 AM IST

தோகா: உலக கோப்பை கால்பந்து போட்டியில் 16 அணிகள் 2 ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில், 2 ஆவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றில் இதுவரை நெதர்லாந்து, அர்ஜெண்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

நேற்று (டிச.5) இரவு 8.30 மணிக்கு 2 ஆவது சுற்று போட்டியில் ஜப்பான் - குரேஷியா அணிகள் மோதிக் கொண்டன. ஆட்டத்தின் 43 ஆவது நிமிடத்தில் ஜப்பான் அணியின் டெய்சன் மேடா ஒரு கோல் அடித்தார். முதல் பாதியில் ஜப்பான் அணி 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியின் 55 ஆவது நிமிடத்தில் குரோஷியாவின் இவான் பெரிசிக் ஒரு கோல் அடித்தார். இதனால் 1-1 என இரு அணிகளும் சமனிலை வகித்தன.

கூடுதலாக 10 நிமிடங்கள் என 3 முறை அளிக்கப்பட்டன. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் குரோசியா அணி 3-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

இதையும் படிங்க: உலகக்கோப்பை கால்பந்து... காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.