கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடடிக்கையாக அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுவருகின்றன. மேலும் இந்தாண்டு டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும் பல உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்நிலையில் உலக வில்வித்தை கூட்டமைப்பு, வில்வித்தைப் போட்டிகளை நடத்தத் தற்போது புதுவித திட்டத்தைக் கையாண்டுள்ளது. ஆனால் இந்த முறை வில்வித்தை வீரர்களுக்காக இல்லாமல், பொதுமக்கள் தங்களது நேரத்தை செலவிடுவதற்காக, ஆன்லைனில் வில்வித்தைத் தொடரை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து உலக வில்வித்தை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒவ்வொரு வாரமும் புதுவிதமான சுற்றுக்களுடன் ஆன்லைன் வில்வித்தை தொடர் நடைபெறும். ஐந்து, எட்டு, பத்து, பதினெட்டு மீட்டர்கள் கொண்ட போட்டிகள் நடத்தப்படும். சிவப்பு வளையத்திற்கு மூன்று புள்ளிகள், மஞ்சள் வளையத்திற்கு ஐந்து புள்ளிகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
NEWS. @WorldArchery launches stay-at-home online #archery league during COVID-19 outbreak 🏹🎯 https://t.co/8aZuF1Pzn6 pic.twitter.com/HvWwgzxQQi
— World Archery (@worldarchery) March 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">NEWS. @WorldArchery launches stay-at-home online #archery league during COVID-19 outbreak 🏹🎯 https://t.co/8aZuF1Pzn6 pic.twitter.com/HvWwgzxQQi
— World Archery (@worldarchery) March 27, 2020NEWS. @WorldArchery launches stay-at-home online #archery league during COVID-19 outbreak 🏹🎯 https://t.co/8aZuF1Pzn6 pic.twitter.com/HvWwgzxQQi
— World Archery (@worldarchery) March 27, 2020
ஒவ்வொரு வார இறுதியில், ஒவ்வொரு தூரத்திலும், வில்லிலும் அதிக புள்ளிகளைப் பெற்றவர்கள் வெற்றியாளர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்” என்று தெவித்துள்ளது. உலக வில்வித்தை கூட்டமைப்பின் இந்த முயற்சிக்கு பல்வேறு துறையினரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:'ஓடுறது தான் என்னோட பலமே' - ஜடேஜா!