இது குறித்து சீன மகளிர் ஐஸ் ஹாக்கி அணியின் சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில், "இம்மாத தொடக்கத்தில் போலந்தில் மகளிர் அணிகளுக்கான உலக ஐஸ் ஹாக்கி போட்டி நடைபெறவிருந்தது. இந்தத் தொடருக்கு தயாராகும் வகையில் சீன வீராங்கனைகள் பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், கோவிட் -19 வைரஸ் காரணமாக இந்த தொடர் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதால், வீராங்கனைகள் மார்ச் 13ஆம் தேதியன்று தாயகம் திரும்பினர்.
வீராங்கனைகள் 11 பேருக்கும் விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோது யாருக்கும் எந்தவித காய்ச்சலும் இல்லை. ஆனாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
தனிமைப்படுத்தப்பிறகு மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அப்போது இருவருக்கு கோவிட் -19 தொற்று பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
அவர்கள் இருவரும் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என குறிப்பிட்டப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க் நகரில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: முன்னாள் கால்பந்து உலகக்கோப்பை நாயகனுக்கு கரோனா பாதிப்பு