இங்கிலாந்து: பிர்மிங்காமில் கடந்த ஜூலை 28ஆம் தேதி காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா இதுவரை 5 தங்கப்பதக்கங்கள் வென்றுள்ளன. பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ், லான் பால்ஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் இந்தியர்கள் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
இந்த நிலையில் தடகளப்போட்டிகள் ஆரம்பித்துள்ளன. இதில் 200 மீட்டர் மகளிர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் இளம் நட்சத்திரம் 'வேகப்புயல்' ஹிமா தாஸ் கலந்து கொண்டார். தகுதிச்சுற்றில் அவர் இலக்கை 23.42 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம் அவர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
6 தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் டாப் 16 இடங்கள் பிடித்த வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இதே போல Hammer throw பிரிவில் இந்தியாவின் மஞ்சு பாலா 59.68மீட்டர் தூரம் வீசி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
-
A good beginning by Hima Das in Women's 200 Meters heat at the #CommonwealthGames 2022 at Birmingham @HimaDas8 #Cheer4India 🇮🇳🇮🇳 pic.twitter.com/hcxqWIrxr5
— Kiren Rijiju (@KirenRijiju) August 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A good beginning by Hima Das in Women's 200 Meters heat at the #CommonwealthGames 2022 at Birmingham @HimaDas8 #Cheer4India 🇮🇳🇮🇳 pic.twitter.com/hcxqWIrxr5
— Kiren Rijiju (@KirenRijiju) August 4, 2022A good beginning by Hima Das in Women's 200 Meters heat at the #CommonwealthGames 2022 at Birmingham @HimaDas8 #Cheer4India 🇮🇳🇮🇳 pic.twitter.com/hcxqWIrxr5
— Kiren Rijiju (@KirenRijiju) August 4, 2022
இதையும் படிங்க: சர்வதேச போட்டிகளில் பதக்கங்களைக்குவித்த காவலர்கள் - முதலமைச்சர் வாழ்த்து!