கொலோன் உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற்றன. இதன் நிறைவு நாளான நேற்று (டிசம்பர் 19) இந்திய குத்துச்சண்டை வீரர்கள் 9 பதக்கங்களை தங்கள் வசப்படுத்தினர்.
தங்கப்பதக்கம்:
இத்தொடரின் மகளிர் 64 கிலோ பிரிவின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் சிம்ரஞ்சித் கவுர், ஜெர்மனியின் மாயா கெளீன்ஹான்ஸை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார்.
-
Our Indian boys and girls have won 9 medals including 3 Gold, 2 Silver and 4 Bonze Medals at the prestigious Cologne Boxing World Cup. India has achieved tremendous progress in Boxing.
— Kiren Rijiju (@KirenRijiju) December 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
My hearty congratulations to our star Boxers! pic.twitter.com/tZE680sSPT
">Our Indian boys and girls have won 9 medals including 3 Gold, 2 Silver and 4 Bonze Medals at the prestigious Cologne Boxing World Cup. India has achieved tremendous progress in Boxing.
— Kiren Rijiju (@KirenRijiju) December 20, 2020
My hearty congratulations to our star Boxers! pic.twitter.com/tZE680sSPTOur Indian boys and girls have won 9 medals including 3 Gold, 2 Silver and 4 Bonze Medals at the prestigious Cologne Boxing World Cup. India has achieved tremendous progress in Boxing.
— Kiren Rijiju (@KirenRijiju) December 20, 2020
My hearty congratulations to our star Boxers! pic.twitter.com/tZE680sSPT
அதேபோல் மகளிர் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் மனிஷா மவுன் - சக நாட்டு வீராங்கனை சாக்ஷி சவுத்ரியை 3:2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
இத்தொடரின் ஆடவர் 52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அமீத் பங்கல், பிரான்சின் பிலால் பினம்மாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
வெள்ளி பதக்கம்:
-
Congratulations to Sakshi Chaudhary on winning the silver medal 🥈 at the Cologne Boxing World Cup. 👏🥊#vkf #boxing@imVkohli @BFI_official pic.twitter.com/tYYHDGQjxs
— Virat Kohli Foundation (@vkfofficial) December 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulations to Sakshi Chaudhary on winning the silver medal 🥈 at the Cologne Boxing World Cup. 👏🥊#vkf #boxing@imVkohli @BFI_official pic.twitter.com/tYYHDGQjxs
— Virat Kohli Foundation (@vkfofficial) December 20, 2020Congratulations to Sakshi Chaudhary on winning the silver medal 🥈 at the Cologne Boxing World Cup. 👏🥊#vkf #boxing@imVkohli @BFI_official pic.twitter.com/tYYHDGQjxs
— Virat Kohli Foundation (@vkfofficial) December 20, 2020
கொலோன் உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்திய அணியின் சதீஷ் குமார், சாக்ஷி சவுத்ரி ஆகியோர் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினர்.
வெண்கலப் பதக்கம்:
இத்தொடரில் இந்தியாவின் சோனியா லதர், மகளிர் 57 கிலோ எடைபிரிவிலும், பூஜா ரானி மகளிர் 75 கிலோ எடைபிரிவிலும், கவுரவ் சொலன்கி ஆடவர் 57 கிலோ எடைபிரிவிலும், முகமது ஹுசாமுதின் ஆடவர் 57 கிலோ எடைபிரிவிலும் வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றினர்.
இதையும் படிங்க:சதத்தை பதிவு செய்யாமல் 2020ஆம் ஆண்டை நிறைவு செய்த விராட் கோலி!