சென்னை: வருகிற இந்தியன் சூப்பர் லீக் (ISL) சீசனுக்காக கேரள கால்பந்து வீரரான பிரசாந்த் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் ’சென்னையின் ஃபுட் பால் கிளப்’ கால்பந்து அணியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடைச் சேர்ந்த 25 வயதான பிரசாந்த், கடந்த ஐந்து ஆண்டுகளாக ’கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப் சி’ கால்பந்து அணிக்காக களமிறங்கினார்.
இந்நிலையில், தற்போது நமது சென்னையின் மரினா மச்சான்ஸ் -ற்காக களம்காணவுள்ளார். இது குறித்து கால்பந்து வீரர் பிரசாந்த் கூறுகையில், “இந்த கிளப்பில் இணைந்தது மிக மகிழ்ச்சியாகவுள்ளது. நான் நிச்சயம் இங்கு எனது 100 சதவீதத்தை அளிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். ஏஐஎஃப்ஃப் எலைட் (AIFF) அகாடமியில் கால்பந்து பயின்ற பிரசாந்த் இந்தியாவின் 17 வயதிற்கு கீழான வீரர்கள் அணியிலும், 20 வயதிற்கு கீழானவர்களின் அணியிலும் இடம்பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த 2021-22 சீசனில் 324 நிமிட ஃபுட்பால் ஆட்டத்தில் ஒரு கோல் மற்றும் ஒரு அசிஸ்ட் அடித்தார். இந்நிலையில், ஏற்கனவே இரண்டுமுறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற சென்னையின் எஃப்சி அணி ’ஏதிகே மொஹுன் பகான் ‘ அணிக்கு எதிராக வருகிற அக்.10 ஆம் தேதி களம்காணவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியா த்ரில் வெற்றி - ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது